செரீனா வில்லியம்ஸ் கடைசிப் போட்டி

செரீனா வில்லியம்ஸ் கடைசிப் போட்டி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

Serena Williams hint op afscheid na US Open: 'Het aftellen is begonnen' |  Tennis | AD.nl

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3,6-3 என்ற நேர் செட்டில் டாங்கா கோவினிக்சை வெளியேற்றி 2வது சுற்றை எட்டினார்.

40 வயதாகும் செரீனா வில்லியம்ஸ்  இந்த போட்டியுடன் டென்னிஸில் இருந்து விடைபெற முடிவு செய்து இருப்பதால் அவரது ஆட்டத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஸ்டேடியத்தில் குவிந்தனர். சுமார் 29,000 ரசிகர்கள் திரண்டு உற்சாகப்படுத்தினர். அடுத்த சுற்றில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோண்டாவெய்ட்டுடன் மோதுகிறார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *