இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

Image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோற்று வெளியேறியது.இந்திய அணியின் பேட்டிங்க் நன்றாக இருந்த போதிலும், பவுலிங் மற்றும் பீல்டிங்கின் சொதப்பல் காரணமாக இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால் இந்த போட்டி வெறும் சம்பிரதாய போட்டியாக இருக்கும். இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த 3 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *