கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…பேட்டிங் வரிசையில் மீண்டு வருமா கொல்கத்தா…?

கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…பேட்டிங் வரிசையில் மீண்டு வருமா கொல்கத்தா…?

கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

பிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அகமதபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

கொல்கத்தாவைப் பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் மட்டும் வென்ற நிலையில், அடுத்த 4 ஆட்டங்களிலும் தொடா்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. முற்றிலுமாக சரிவைச் சந்தித்துள்ள அந்த அணியின் பேட்டிங் வரிசை மீண்டால் மட்டுமே கொல்கத்தாவுக்கு வெற்றிகள் வசமாகும். நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுப்மன் கில் ஆகியோர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்.

பஞ்சாபை பொறுத்தவரை தொடர் தோல்வியிலிருந்து மீண்டு கடைசி ஆட்டத்தில் வென்று நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது. நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா இன்னும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பவுலிங்கில் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் ஆகியோர் நல்ல முறையில் செயல்படுகின்றனர். இருஅணிகளும் சம பேட்டிங் பலத்துடன் இருந்தாலும் பொறுப்பை உணர்ந்து ஆடினால் நிச்சயம் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *