மும்பை இந்தியன்ஸ் சிறப்பான பந்து வீச்சு: 34 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் சிறப்பான பந்து வீச்சு: 34 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது.

ஷார்ஜாவில் நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டி காக்கின் அதிரடி அரை சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 208 ரன்கள் அடித்தது.209 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஹைதராபாத் அணியில் களம் இறங்கினர் கேப்டன் டேவிட் வார்னர் பேரிஸ்டவ் வர, ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய பேரிஸ்டவ்(25 ரன்கள்,15 பந்துகள்) போல்ட் பந்தில் வெளியேற,அடுத்து வந்த மனிஷ் பாண்டே வார்னருடன் இணைந்து ஹைதராபாத் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

பாட்டிசன் வீசிய 10 வது ஓவர் முடிவில் மனிஷ் பாண்டே(30 ரன்கள்,19 பந்துகள்)பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேற,10 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழந்து 94 ரன்கள் எடுத்து இருந்தது.தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கேப்டன் டேவிட் வார்னர் 34 பந்துகளில் 50 ரன்களை கடக்க,ஹைதராபாத் அணி 116 ரன்களில் இருந்த போது போல்ட் வீசிய 12.2 ஓவரில் வில்லியம்சன் 3 ரன்களில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கடந்த போட்டியில் அரை சதம் அடித்த பிரியம் கார்க் களம் இறங்கி 7 பந்துகளில் 8 ரன்களுடன் நடையை கட்டினார்.ஹைதராபாத் அணிக்கு 27 பந்துகளில் 67 ரன்கள் தேவையாக இருக்க,பாட்டிசன் வீசிய ஓவரில் வார்னர்(60 ரன்கள்,44 பந்துகள்) அடிக்க முற்பட்டு இஷான் கிஷனின் அற்புதமான கேட்ச்சால் வெளியேறினார்.

அடுத்து அபிசேக் சர்மா மற்றும் சமத் களத்தில் இருக்க, 19 வது ஓவர் வீசிய பும்ரா பந்தில் சமத் ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தே அவுட் ஆகி வெளியேறினார்.8 பந்துகளில் 37 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு தேவையாக இருக்க,அபிசேக் சர்மா கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.கடைசி ஓவர் போட வந்த பொல்லார்ட் 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *