விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி தொடருக்கு நடராஜன் தேர்வு

விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி தொடருக்கு நடராஜன் தேர்வு

சமீபத்தில் சேலத்து மண்ணின் மைந்தன் நடராஜன், ஆஸ்திரேலியா வரை சென்று சிறப்பாக விளையாடி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற காரணமாக இருந்தார். நெட் பவுலராக சென்ற நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து விதமான போட்டியிலும் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய நடராஜனுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, இரண்டு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே நடராஜனின் திறமை வெளி உலகிற்கு தெரிந்தது. இதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தன் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். திறமையும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தத் துறையில் வேண்டுமானாலும் வெற்றியடைய முடியும் என நிரூபித்துள்ளார் நடராஜன்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *