இந்திய அணியுடன் நாளை இணைகிறார் ரோஹித் சர்மா : 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படுவாரா ?

இந்திய அணியுடன் நாளை இணைகிறார் ரோஹித் சர்மா : 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படுவாரா ?

சிட்னியில் தனிமை படுத்தப்பட்டிருந்த ரோகித் சர்மா நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் நாளை இணைகிறார்.

சிட்னி :

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, தற்போது உடல் நிலை தகுதி பெற்று கடந்த 16 ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பினார்.

Read more – கமல்ஹாசனிடம் இருந்து காப்பி அடிக்கிறார் ஸ்டாலின் : அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

3 வது போட்டியில் விளையாட உடற்தகுதி பெற்றதால் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டார். 14 நாட்கள் முடிவடைந்ததையொட்டி நாளை மெல்போர்னில் இருக்கும் இந்திய அணியுடன் ரோகித் சர்மா இணைகிறார்.இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ரோகித் சர்மா அணியில் இணைய இருப்பது குறித்து ஆர்வமாக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

சிட்னியின் தற்போது கொரோனா பரவும் நிலையில் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் மாற்றப்படும் என்ற தகவல் பரவியது. இதை முற்றிலும் மறுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *