செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபனில் ரஷ்ய வீரர் சாம்பியன்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபனில் ரஷ்ய வீரர் சாம்பியன்

ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.


செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் ரஷிய வீரர் ஆந்த்ரே ருப்லெவ், குரோஷிய வீரர் போர்னா கோரிச்சுடன் மோதினார். இந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் போர்னா கோரிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.


இந்த ஆண்டில் ரூப்லெப் கைப்பற்றிய 4-வது ஏடிபி டென்னிஸ் பட்டம் இதுவாகும். ஏற்கனவே தோகா, அடிலெய்டு, ஹாம்பர்க் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருந்தார் ஆந்த்ரே ருப்லெவ். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக பட்டம் வென்ற நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா), ரூப்லெவ் சமன் செய்துள்ளார்ர். இந்த வெற்றியின் மூலம் ரூப்லெவ் தரவரிசையில் 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பெற்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *