ஹைதராபாத் அணியிடம் பஞ்சரானது பஞ்சாப் : 69 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி

ஹைதராபாத் அணியிடம் பஞ்சரானது பஞ்சாப் : 69 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.ஹைதராபாத் அணி சார்பில் தொடக்க வீரர்களாக வார்னர்,பேரிஸ்டவ் களம் இறங்கி அதிரடியால் 201 ரன்கள் எடுத்தது.202 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய தொடக்க வீரர் அகர்வால் 9 ரன்களில் அவுட் ஆக,அடுத்து வந்த ப்ரம் சிம்ரன் அதிரடியாய் 2 பௌண்டரி அடித்து கலீல் அஹ்மத் பந்தில் கார்க்கின் சிறப்பான கேட்ச்சால் வெளியேறினார்.

ஆரம்பம் முதல் ரன் அடிக்க திணறிய கேப்டன் ராகுல்(11 ரன்கள்,16 பந்துகள்) அபிசேக் சர்மா வீசிய 7 வது ஓவரில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்தார்.மறுமுனையில் களம் இறங்கிய பூரன் அதிரடியாய் வெளிப்படுத்த வெறும் 17 பந்துகளில் 50 ரன்களை கடக்க, பூரன் உடன் இணைந்த மேக்ஸ்வல் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த மந்தீப் சிங்கும்(6 ரன்கள்,6 பந்துகள்) ரஷித் கான் பந்தில் கிளீன் போல்ட் ஆக,13 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்களை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

14 வது ஓவர் வீசிய கலீல் பந்தில் முஜீப் பேரிஸ்டவிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேற,பஞ்சாப் அணிக்கு 36 பந்துகளில் 76 ரன்கள் தேவையாக இருந்தது.பஞ்சாப் அணிக்கு ஒரே நம்பிக்கையாய் இருந்த நிக்கோலஸ் பூரன்(77 ரன்கள்,37 பந்துகள்) ரஷித் பந்தில் நட்ராஜனிடம் கேட்ச் கொடுக்க,அதே ஓவர் அடுத்த பந்தே சமியும் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
16 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 131 ரன்களுடன் தடுமாறியது.நடராஜன் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை தூக்க,பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

ஹைதராபாத் அணியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பேரிஸ்டவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *