ஸ்டூவர்ட் பிராட்,அசத்தல் ஆட்டம் திணறும் வெஸ்ட்இண்டீஸ்!!

ஸ்டூவர்ட் பிராட்,அசத்தல் ஆட்டம் திணறும் வெஸ்ட்இண்டீஸ்!!
மான்செஸ்டர் : இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தை முடித்துள்ளது. முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து அணி. முதல் நாள் பந்துவீச்சில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் விக்கெட்களை அள்ளியது.

மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை சாதகமாக பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு ஸ்விங் செய்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். ஆலிவர் போப், கேப்ரியலின் பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற கார்ன்வால் தவற விட்டார். என்றாலும் கேப்ரியலின் அடுத்த ஓவரில் போப் (91 ரன்) கிளன் போல்டு ஆனார். பட்லர் (67 ரன்), கிறிஸ் வோக்ஸ் (1 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் (3 ரன்) வரிசையாக பெவிலியன் திரும்பினர். அப்போது இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 300 ரன்களை தொடுமா என்ற கேள்வி எழுந்தது  ஆனால் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட் அதிரடி காட்டினார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய பிராட் அரைசதம் கடந்து அசத்தினார். அவரும், டாம் பெஸ்சும் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் திரட்டி அணிக்கு ஆறுதல் அளித்தனர்ஸ்டூவர்ட் பிராட் 62 ரன்களும் (45 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 11 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

Sturat Broad

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையும் சேர்த்து கெமார் ரோச்சின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 201 ஆக (59 டெஸ்ட்) உயர்ந்தது. இந்த இலக்கை கடந்த 9-வது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஆவார். 1994-ம் ஆண்டுக்கு பிறகு 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் என்ற பெருமையையும் 32 வயதான கெமார் ரோச் பெற்றார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் சொதப்பியது. 47.1 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *