கடைசி பந்தில் ஷாருக்கான் அசத்தல் சிக்சர் – சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்றது தமிழகம்!!

கடைசி பந்தில் ஷாருக்கான் அசத்தல் சிக்சர் – சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்றது தமிழகம்!!

கடைசி பந்தில் ஷாருக்கான் அசத்தல் சிக்சர் – சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்றது தமிழகம்!!

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதின. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் தமிழக வீரர் ஷாருக்கான்.

இன்றைய ஆட்டத்தில் தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த்-ஜெகதீஷன் களமிறங்கினர். முதல் ஓவரில் 9 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக ஆடி வந்த நிஷாந்த் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும். அடுத்து வந்த சுதர்சன் 9, சஞ்சய் யாதவ் 5, முகமது 5, என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 15-வது ஓவரில் விஜய் சங்கர் 18, ஜெகதீஷன் 41 அடுத்தடுத்து வெளியேறினர்.

அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் தமிழக அணிக்கு வெற்றியை தேடி தந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அணிக்கு கோப்பையை வசப்படுத்தினார். அவர் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 1 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *