ஆர்சிபி: ஐபில் கப் மட்டும்தா அடிக்க மாட்டோம், ஆனா சாதனைகள் பட்டியல் புல்லா நாங்கதான்

ஆர்சிபி: ஐபில் கப் மட்டும்தா அடிக்க மாட்டோம், ஆனா சாதனைகள் பட்டியல் புல்லா நாங்கதான்
கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் என்பதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற, ஐபிஎல் தொடரில் முறியடிக்க முடியாத சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த 12 ஆண்டுகால ஐபிஎல் தொடரில் நிகழ்த்தப்பட்டுள்ள பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம். முதலாவதாக, ஐபிஎல் வரலாற்றில் நிகழ்த்தப்பட்டுள்ள முறியடிக்க கடினமான சில சாதனைகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்தை சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் விளாச, கொல்கத்தா அணி 222 ரன்கள் அடித்தது. இதன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி வெற்றி பெற்றதே, ஒரு அணி அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது.

ஒரே ஓவரில் அதிக ரன்கள் :

2011ம் ஆண்டு பெங்களூரு அணியின் வீரர் கிறிஸ் கெயில் கொச்சி அணிக்கு எதிராக ஒரே ஓவரில்(ஒரு நோபால் உட்பட) 37 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என வீசப்பட்ட 7 பந்துகளையும் அவர் பவுண்டரி லைனுக்கு அனுப்பி பதம் பார்த்தார்.

அதிகபட்ச அணியின் ரன் :

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புனே அணிக்கு எதிரான போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி 263 ரன்கள் குவித்தது. இதில் கிறிஸ் கெயில் 175 ரன்கள் அடித்திருந்தார். இந்த அதிகபட்ச அணியின் ரன் என்ற சாதனையை தற்போது வரை முறியடிக்கப்படவில்லை.

அதிகபட்ச தனிப்பட்ட ரன் :

மீண்டும் கிறிஸ் கெயில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அந்த போட்டியில் 175 ரன்கள் அடித்து 17 சிக்சர்கள் விளாசி இருந்தார். இந்த சாதனையையும் தற்போது வரை முறியடிக்கப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *