அமெரிக்கா ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் நவாமி ஒசாகா…

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் நவாமி ஒசாகா…
ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவை தோற்கடித்து இந்த ஆண்டின் அமெரிக்கா ஓபன் பட்டத்தை வென்றார்.

கொரோனா நோய் தொற்று காரணாமாக தள்ளி வைக்க பட்ட அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இந்த மாதம் தொடங்கியது, முன்னணி டென்னிஸ் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட இந்த டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார்.

முதல் செட்டை 6-1 என அஸ்ரென்கா எளிதில் தனதாக்கினார். இதனால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், நவோமி ஒசாகா 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்காரணமாக 2-வது செட்டை 6-3 என ஒசாகா கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் நவோமி ஒசாகாவின் கையே ஓங்கியிருந்தது இதனால் அந்த செட்டையும் 6-3 எனக் கைப்பற்றி 1-6, 6-3, 6-3 என அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *