சச்சின் சாதனை முறியடிப்பு : அதிவேகமாக 12,000 ரன்களை கடந்த கோலி

சச்சின் சாதனை முறியடிப்பு : அதிவேகமாக 12,000 ரன்களை கடந்த கோலி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை அதிவேகமாக கடந்து விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்தார்.

கான்பெர்ரா:

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர் தவான் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேற,அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் பெற்று இருந்த போது,புது உலக சாதனை ஒன்றை படைத்து அசத்தினார்.

அதிவேகமாக 12,000 ரன்களை கடந்த கோலி சச்சினின் சாதனையை முறியடித்து 251-வது போட்டியில் (242 இன்னிங்ஸ்) இந்த இலக்கை எட்டினார்.ஏற்கனவே சச்சின் 309 ஒருநாள் போட்டிகளில் (300 இன்னிங்ஸ்) விளையாடி 12,000 ரன்களை கடந்து மிக நீண்ட காலமாக இந்த சாதனையை தக்க வைத்து இருந்தார்.அந்த சாதனையை விராட் கோலி 251 போட்டிகளில் முறியடித்தார்.

12,000 வேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில் தற்போது கோலி முதலிடத்திலும்,சச்சின் 2 வது இடத்திலும் உள்ளனர்.மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (323 போட்டிகள்) உள்ளார்.இலங்கை வீரர் சங்ககாரா (359 போட்டிகள்) நான்காவது இடத்திலும், சனத் ஜெயசூர்யா (390 போட்டிகள்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *