இன்று பள்ளி செல்லும் மாணவர்களுக்கு (ஸ்கூல் இல்லங்கிறது கொரோனா டிபார்ட்மெண்ட்… ) வீட்டிலிருந்தே பெற்றோர் உணவு, ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில், புத்தகங்கள் என சகலத்தையும் மூட்டையாக கட்டி கொடுத்து விடுகிறார்கள். ஆனால் 80’ஸ், 90’ஸ் கிட்ஸ்களின் உலகம் வேறானது. பள்ளியின் தண்ணீர் தொட்டியில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு, பருப்பு வாசம் வீசும் சத்துணவை சாப்பிட்டுவிட்டு, பள்ளியின் எதிரில் இருக்கும் பாட்டியிடமோ, தாத்தாவிடமோ இருக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டால் தான் ஒரு திருப்தி இருக்கும். காலை, மாலை இருவேளையும் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடும் குழந்தைகள் பாக்கியசாலிகள். காசு இல்லையா? கவலையே இருக்காது. அருகிலிருக்கும், மாமரமோ, நாவல்மரமோ, பாதாம் மரமோ, கொய்யா மரமோ ஸ்நாக்ஸ் வழங்கி விடும்.
அப்படிப்பட்ட குழந்தைகளிடம் ஸ்கூல் போகும்போது நீங்க விரும்பி வாங்கி சாப்பிடுற ஸ்நாக்ஸ் என்ன என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அவர்களின் சுவாரஸ்யமான பதில் இதோ…
நந்தினி ஆறுமுகம் : Mary ice என ஒன்று பள்ளியின் அருகில் விற்பார்கள். Snacks concept-லாம் சென்னை வந்துதான். இலந்தைப் பழம் ரொம்ப பிடிக்கும்.. சில நாட்கள் மாங்காய் பத்தை.
அருணா ரவி : சீடை… உரலு மிட்டாய். கிரிச்சா மாட்டாய்.
ராஜசேகர் : நிறய இருக்கு bro… ஆனா கடலை மிட்டாய் தான் favourite… இப்பவும் கூட… Big fun bubble gum… Later, Boomer-ம்… cricket ஆடுறப்ப…
நல்லசாமி : மாங்காய், தேன் மிட்டாய், 25 பைசாவுக்கு பழரசம், ஆசை சாக்லேட், பப்பர மிட்டாய், கல்கோனா…
கல்பனா : மாங்காய் துண்டு உப்பு மிளகாய் பொடி தடவுனது, குட்டி நெல்லிகாய், குட்டி கமலா ஆரஞ்சு, குச்சி முட்டாயி, தேன் மிட்டாய், கம்மர்கட், தேங்காய் பர்ப்பி, சுத்தற மிட்டாய், குடல் வத்தல் சின்னது & பெருசு வாங்கி பத்தி விரல்லயும் மாட்டிக்கறது, சேமியா ஐஸ்…. 8th std-க்கு அப்பறமா சுக்கு முட்டாயவே கொஞ்சம் style ah polo வாங்கி சாப்பிடுவோம்…
வேற ஞாபகம் வந்தா சொல்றேன்…
மதிநிறைசெல்வன் : நிறைய இருக்கே.. ஸ்கூலுக்கு போக வர பஸ் பாஸ் குடுக்கும் முன்னாடி, ஒரு ரூபாய் ஐம்பது காசு அம்மா குடுப்பாங்க. ஆனா நடந்தே ஸ்கூல் போய்ட்டு திரும்ப வரும்போது நடந்தே கமர்கட்டு வாங்கி சாப்பிட்டுக்கிட்டே வருவோம். வழியில் ஆத்து பாலத்துக்கு சைட்ல காவிரி தண்ணி பைப் லைன் போகும்.. அதுலயும் ஏறி வருவோம். இதையெல்லாம் பாத்து ஏரியால இருக்க யாராச்சும் அம்மா கிட்ட போட்டு குடுத்துடுவாங்க… அம்மா பருப்பு கடையிற மத்து வச்சு வாசல்ல ரெடியா நின்னுட்டு இருப்பாங்க.
அபிநயா : பால் பவுடர், மம்மி டாடி ரொம்ப பிடிச்சது…
நாராயணமூர்த்தி : பேப்பர் அப்பளம், இலந்தம்பழம் அடை, கமர்கட் அதுல காசு இருக்கும். பாக்கு மிட்டாய், சக்கரம் சுத்தர மிட்டாய், ஆசை சாக்லேட், சேமியா ஐஸ், பால் ஐஸ், ரூபி ஐஸ், சிகரட் மிட்டாய், அச்சு பால்கோவா, botti, குடல் அப்பளம்…
பாண்டியன் : இலந்த வடை, நைஸ் மாங்காய் கீற்று, ஐஸ் அரைத்து அதில் செய்யும் கலர் கலரா ஐஸ்… இன்னும் பல…. பருத்தி பால். எங்கள் ஊரில் பேக்கரி வந்தப் புதிதில் எப்படியும் மாதம் ஒரு முறையாவது காசு சேமித்து அல்லது நண்பர்களுடன் இணைந்தோ, 3 ரூபாய் 50 காசுகளுக்கு வெனிலா கேக் வாங்குவோம்.
பமீலா : இலந்த பழம்
ஸ்ரீதர் கிருஷ்ணன் : மாங்காய் உப்பு – மிளகாய் தூள், பஞ்சு மிட்டாய், தேங்காய் மிட்டாய், குச்சி ஐஸ்… அது போக எதெல்லாம் வாங்க காசு இருக்கோ அதெல்லாம்…
சுகேஷ் : ஒன்றா இரண்டா? கொகச்சி மிட்டாய், கல்கோனா, தேன்மிட்டாய், ஜிலேபி, பொரி உருண்டை, குச்சி ஐஸ், புரோட்டா, அங்கிள் ஜான் ஐஸ்கிரீம்…
பிரபாகரன் : அது நிறைய இருக்கு.
நான் சிறு வயதில் படிக்கும்போது (வேண்டாம் பள்ளிக்கு போகும் போது) 3 மைல் தூரம் நடக்கனும். இடையில் ஜெயராஜ் பெட்டிகடை என ஒன்று இருக்கும். அங்க 5 பைசாக்கு ஒரு மிட்டாய்… 5 மிட்டாய் வாங்கி, இரண்டு மிட்டாயை தண்ணீர் பாட்டில்ல போடுவேன். அந்த மிட்டாய் நிறத்தில் அந்த தண்ணீர் மாறும். சுவை கூட அதே மாதிரி இருக்கும்.
கல்கோனா ஒண்ணு வாங்கி வாய்ல போட்டு சப்பி சுவைத்தால், பள்ளி போகும்போது அதில் தேங்காய் தூள் மாதரி இருக்கும். அதை கடித்து திண்ணுட்டு மம்மி டாடி என ஒரு பாக்கு இருக்கும். அதை தின்னா ஒரு மாதிரி சுவையா இருக்கும். அந்தப் பாக்கெட்டில் தலைகீழா பார்த்தால், ஆண் பெண் படம் இருக்கும். மதியம் மாங்கா, இலந்தபழ அடை, பேப்பர் மிட்டாய், தேன் மிட்டாய் என எது கிடைத்தாலும் சாப்பிடுவோம்.
பள்ளிக்கூடத்தில் முட்டை போடும்போது அதை சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிடுவது என எங்க ஜாலிக்கு அளவு இல்லை. பொறி உருண்டை பிடிக்கும். அப்பளத்தை கையில் மாட்டி சுவைப்பது.. ஆசை சாக்லெட் சாப்பிட்டப் பிறகு அந்த பேப்பரை இருபுறம் இழுத்தால் வண்ணத்துபூச்சி (பாப்பாத்தி) மாதிரி தெரியும்…
திருப்பதி வாசகன் : அடை மாங்கா, அரை நெல்லிக்கா, சக்கரை வள்ளிக்கிழங்கு, ஜவ்வு மிட்டாய், ஜவ்வரிசி ஐஸ், பால் ஐஸ், மாங்காய் கீத்து, பதனி, சோமாஸ், சுண்டல், கள்ளு, சாராயம் அம்புட்டுதேன். ஒன்னாப்புலருந்து, ப்ளஸ்- டூ வரைக்கும் வரிசையா போட்டுக்கங்க….. வருச, வருசம் மாற்றம், முன்னேற்றம்….
கோகிலா ராணி : பள்ளி நாட்கள்ல சாயந்திரம் தெருவுல வர்ற கேக் வண்டில எதாவது.. லீவுனா நெஸ்லேல ஒரு க்ரீம் மாதிரி ஒன்னு பாக்கெட்ல வரும். அது இல்லனா bunkers.. அன்னைக்கு மட்டும் தான் ரெண்டு ரூபாய்க்கு வாங்கி சாப்பிட அனுமதி.. அதனால மணிக்கணக்கா வச்சு சாப்பிடுவேன். பாக்கு மிட்டாய், சூட மிட்டாய், மம்மி டாடி, கல்கோனா, கலாக்காய், ஜெல்லி.. காலேஜ் போனப்புறமும் லாலி பாப், ஜெல்லி எல்லாம் வாங்கி சாப்பிடுவோம். ஜெல்லிலயே பழங்கள் வடிவத்துல டப்பால வரும். ஊருக்கு வரும் போதெல்லாம் எனக்கு, அக்காக்கு, மாமா பையனுக்குனு வாங்கிட்டு வந்து ஒன்னா சாப்பிடுவோம்.
பள்ளி செல்லும் பருவத்தில் உங்களுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்ன என்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள் மக்கா…