43 மருத்துவர்கள் மரணம் ஆதாரம் வெளியிட்டு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!!

43 மருத்துவர்கள் மரணம் ஆதாரம்  வெளியிட்டு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!!
கொரோனாவால் நம் மாநிலத்தில் அதிக மருத்துவர்கள் இறக்கிறார்கள் என நான் சுட்டிக்காட்டிய போது அமைச்சர்  விஜயபாஸ்கர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.’அவதூறு கிளப்பிட்டார்,வழக்கு போடுவோம்’ என்றும் மிரட்டினார்.

ஆனால், இன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பே (IMA) தமிழகத்தில் தான் அதிக மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என பெயர், முகவரியோடு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு சொல்வதும் பொய்யென வழக்குப் போடுவார்களா?

மக்கள் மரணத்தை மறைத்தவர்கள் மருத்துவர்களின் மரணத்தையும் மறைப்பதோடு, தொற்றால் இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் நிவாரணத்தை ரூ.25 லட்சமாகக் குறைத்துள்ளனர்.

இது தான் உயிரைப்பணயம் வைத்து கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு அரசு செலுத்தும் மரியாதையா? இது அவர்களுக்கு செய்யும் துரோகமில்லையா?

இடமாறுதலுக்கு இவ்வளவு, இந்தப் பொறுப்புக்கு அவ்வளவு என கமிஷனில் காட்டும் அக்கறையை, உயிர்காப்பவர்களின் நலனிலும் காட்ட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என பலியான முன்கள வீரர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டு அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இதுவே கழகத்தின் எண்ணம்!என உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *