பா.ஜ.க கைகாட்டுபவரே தமிழகத்தின் அடுத்த முதல்வர்:முருகன் அதிரடி பேட்டி

பா.ஜ.க கைகாட்டுபவரே தமிழகத்தின் அடுத்த முதல்வர்:முருகன் அதிரடி பேட்டி
பா.ஜ.க கைகாட்டும் தலைவரே தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்தார்.

வேல் யாத்திரை தொடங்க முயன்ற பாஜக தலைவர் முருகன் நேற்று முன்தினம் திருத்தணியில் கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து 2-வது நாளாக திருவொற்றியூர் திருவுடையம்மன் கோயில் வந்த அவர் நடை மூடப்பட்டு இருந்ததால் வெளியே இருந்து கற்பூரம் காட்டி சாமி கும்பிட்டார். இதைத் தொடர்ந்து ஊர்வலம் செல்ல முயன்றபோது அவர் மீண்டும் கைதானார்.

அவருடன் பாஜகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. பாஜக கை காட்டும் தலைவரே அடுத்ததாக தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்வார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.மத்தியில் பாஜக தலைமையிலான அரசு எப்படி ஸ்திரமான நிலையில் உள்ளதோ தமிழகத்திலும் அந்த நிலை ஏற்படும்” என்றார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *