ஆன்லைனில் ஈ.பி. பில் கட்டுறவங்ளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… இணையதள முகவரிகள் மாற்றம்…

ஆன்லைனில் ஈ.பி. பில் கட்டுறவங்ளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… இணையதள முகவரிகள் மாற்றம்…
தமிழ்நாடு மின்சார வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் புதிய இணையதள முகவரிகளை அனைவரும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNEB

பொதுமக்கள் பயனடையும் வகையில், இணையதளத்தின் மூலம் மின் இணைப்பு விண்ணப்பம், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், மின்வாரிய இணையதளத்தின் முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன.

மின்சார வாரியத்தின் புதிய இணையதள முகவரிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி www.tangedco.org , www.tantransco.org , www.tnebltd.org. இந்தப் புதிய இணையதள முகவரிகளை வரும் அக்டோபர்-28 ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இருந்த பழைய இணையதள முகவரிகள் www.tangedco.gov.in , www.tantransco.gov.in , www.tnebltd.gov.in ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *