தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள 502 அரசு மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள 502 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின அரசு மகளிர் விடுதிகளில் 2510 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக அரசு டெண்டர் கோரியது.

எல்காட் நிறுவனம் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் மூலமாக திட்டத்தை செயல்டுத்தாமல், அரசு வெளியிட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத மனுதாரருக்கு இந்த வழக்கை தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டப்படி பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து நியாயமான டெண்டர் கோரப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு உரிமையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், நியாயமான, வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகளை பின்பற்றி மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்களும், உபகரணங்களும் பொருத்துவதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *