12 ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் : நாளை மறுநாள் வெளியிட தேர்வுத் துறை திட்டம்

12 ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் : நாளை மறுநாள் வெளியிட தேர்வுத் துறை திட்டம்
+2 மறு தேர்வு – விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாளை மறுநாள் தேர்வு முடிவு.

பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மார்ச் 24-ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில், சிலரால் எழுத முடியவில்லை என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து, தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) மறுதேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் நடைப்பெற்ற இந்த தேர்வுகளில் 300 மாணவர்கள் தேர்வை எழுதினர்.மேலும், 800 பேர் ஹால் டிக்கெட்டுகளை பெற்றிருந்த நிலையில், 500 பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று, தற்போது நடந்து வரும் நிலையில் நாளை மறுநாள் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *