Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஊருக்கு ஊர் கூட்டம் அவசியமா? டிடிவி தினகரன் கேள்வி..

September 18, 2020
சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமிழக முதலமைச்சருக்குப் பொருந்தாதா? கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வேண்டுமென்றே ஊருக்கு ஊர் கூட்டம் நடத்துவது சரியா என்று அமமுக பொதுச்செயலாளர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தமிழக முதல்வரின் இந்த கூட்டங்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

5 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடக்கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமக்குப் பொருந்தாது என்ற நினைப்பில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது.

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து… டிஜிபி அலுவலகத்தில் புகார்

வேலை வாங்கித் தருவதாக மோசடி… எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது பண மோசடி வழக்கு..!

திட்டுமிட்டு ஆட்களை கூட்டி வந்து சமூக இடைவெளி இன்றி அவர்களை நிற்க வைத்து வரவேற்பு என்ற பெயரில், அரசு பிறப்பித்திருக்கும் அத்தனை நோய் தடுப்பு விதிமுறைகளையும் மீறும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதே போன்றுதான் சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற முதலமைச்சரின் நிகழ்ச்சியிலும் நடந்து கொண்டார்கள்.

அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அ.தி.மு.க. தொண்டர்களைப் பற்றி முதலமைச்சர் பழனிசாமிக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா? மேடைக்கு மேடை, ‘தனி மனித இடைவெளி அவசியம்’, ‘அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம்’, ‘பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்’ என்றெல்லாம் வசனம் பேசி வரும் முதலமைச்சர், அவ்வாறு மக்கள் கூடக்கூடாது என 144 தடைச்சட்டம் போட்ட முதலமைச்சர், தானே பொதுநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, தான் செல்லுமிடமெல்லாம் மக்களை திரட்டிவைப்பது ஏன்?

கொரோனா பரவலுக்கு பொதுமக்கள்தான் காரணம் எனச் சித்தரிக்கும் முதலமைச்சர், அதற்கு நேர்மாறாக தானே செயல்படுவது எப்படி சரியாக இருக்க முடியும்? மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திவிட முடியாதா? ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ என்பது போலல்லவா இருக்கிறது பழனிசாமியின் இந்தச் செயல்பாடு.

மாவட்டத்திற்கு மாவட்டம் இந்தக்கொடுமை போதாதென்று, முதலமைச்சர் பழனிசாமி செல்லுமிடம் எல்லாம் மணிக்கணக்கில் போக்குவரத்தை நிறுத்திவைத்து, ஏற்கனவே கொரோனாவால் நொந்து போயிருக்கும் மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.

அதிகாரம் தரும் தடுமாற்றத்தில் போடும் இந்த ஆட்டங்களை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். அவர்களுக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், என்று டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தியா-சீனா மோதல்: ராஜ்நாத்சிங் அறிக்கைக்கு சீனா பதில்

Next Post

நியாயவிலை கடைகளுக்கு மாதத்தில் 3 வது சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு

Next Post

நியாயவிலை கடைகளுக்கு மாதத்தில் 3 வது சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version