மீன் விற்று ஒரே நாளில் லட்சாதிபதி ஆன பெண்!

மீன் விற்று ஒரே நாளில் லட்சாதிபதி ஆன பெண்!
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி ஒருவர் 52 கிலோ எடை கொண்ட ஒரு மீனை 3 இலட்சத்திற்கு விற்று, ஒரே இரவில் இலட்சாதிபதி ஆகியுள்ளார்.
bigfish

புஷ்பா கர் எனும் அந்த பெண்மணி சக்ஃபுல்தூபி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஆற்றில் ஒரு பெரிய மீனை இவர் கண்டுள்ளார். உடனே, ஆற்றில் குதித்து அந்த மீனை பிடித்துள்ளார். தனது உடல் வலிமைக்கு மீறிய போதும், கஷ்டப்பட்டு அந்த மீனை கரைக்கு எடுத்து வந்துள்ளார்.

உள்ளூர் மக்களிடம் விசாரித்த போது, அந்த 52 கிலோ மீனை, கிலோ 6200 ரூபாய் வரையிலும் விலை வைத்து விற்றுள்ளார். போலா என்ற வகையைச் கூறப்படும் அந்த மீனைத் தூக்கி வர அக்கம்பக்கத்தினர் உதவியுள்ளனர். இதன் உடல் பாகங்களில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன என்றும் தெற்காசிய பகுதிகளில் இந்த மீன் அதிக விலைக்கு போகிறது என்றும் மீன் சந்தையை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

சிலர், இந்த மீன் கிலோ 80 ஆயிரம் வரை போகும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. எப்படியோ, அந்த மீனவ பெண்மணிக்கு ஒரே நாளில் 3 லட்ச ரூபாய் சம்பாதித்தது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த 2020 வருடத்தில் பெருமளவு சந்தோஷத்தை அனுபவித்த முதல் நபர் அந்த பெண்மணியாக இருக்கக்கூடும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *