புறம்போக்கு நிலம், அறநிலையத்துறை நிலம் கையகபடுத்துதல் தொடர்பாக தமிழக அரசு முடிவு

புறம்போக்கு நிலம், அறநிலையத்துறை நிலம் கையகபடுத்துதல் தொடர்பாக  தமிழக அரசு முடிவு

குடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு கோயில் மனைகளை தமிழக அரசு விலைக்கு வாங்கிய பிறகு, அதை வரன்முறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில், அதனை ஆக்கிரமித்துள்ள பொதுமக்கள் தாங்கள் பல ஆண்டுகளாக வசிப்பதால், எங்களுக்கு அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்சேபனை இல்லாத நிலங்களை வரன்முறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதுமுள்ள இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 409, நகர பகுதிகளில் 12 இடங்களும், சென்னை நகர்ப்புற பகுதிகளில் 36 இடங்களும், காஞ்சிபுரத்தில் 123 இடங்களும், வேலூரில் 107 இடங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 70 இடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 350 இடங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 948 இடங்களும், கோவை மாவட்டத்தில் 308ம், நாமக்கல் 110, ஈரோடு 291, பெரம்பலூர் 204, நாகை 12,218, தஞ்சாவூர் ஊரகப்பகுதிகளில் 1022, நகர்ப்புற பகுதிகளில் 19, திருவாரூர் 333, மதுரை 351, தேனி 46, கள்ளக்குறிச்சி 248, கிருஷ்ணகிரி 226, செங்கல்பட்டு 129 என ஊரகப்பகுதிகளில் மொத்தம் 18,086 இடங்களும், நகர்ப்புற பகுதிகளில் 76 இடங்களும் வரன்முறைப்படுத்தப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *