நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும்.
குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள்.
இந்நிலையில், படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (O4.01.2023) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.