என் சாவுக்கு பொதுமக்கள்தான் காரணம் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு

என் சாவுக்கு பொதுமக்கள்தான் காரணம் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு

தன் சாவுக்கு பொதுமக்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicide - Wikipedia

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் தில்லை கோவிந்தன் (65) திருமணமாகாத இவர் நோய்வாய்ப்பட்டு தனிமையில் வசித்து வந்தார். நேற்று, அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அகற்றியது. இதற்கு தில்லைகோவிந்தன்தான் காரணம் என சிலர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனமுடைந்த தில்லை கோவிந்தன், தன் சாவுக்கு பொதுமக்கள் தான் காரணம். அவர்கள் திட்டியதால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. இதுபோன்ற எண்ணம் வந்தால் 104 என்ற எண்ணிற்கு உடனே அழையுங்கள். மேலும், ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையம்  – 044 – 24640050, 28352345 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *