உணவில் புழு! பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்

உணவில் புழு! பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  விடுதியில் ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தரமற்ற உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடன், பல்கலைக்கழக அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *