’பொன்னியின் செல்வன்’ 3 நாள்கள் சுற்றுலா

’பொன்னியின் செல்வன்’ 3 நாள்கள் சுற்றுலா

பொன்னியின் செல்வன் வரலாற்றில் வரும் இடங்களை காண சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரை பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 3 நாள் சுற்றுலாப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்' நாவல் கதை என்ன... 4 நிமிடங்களில் சுருக்கமா  தெரிஞ்சுக்கலாம் வாங்க! - Tamilnadu Now

தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள இந்த சுற்றுலாவிற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் https://www.ttdconline.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னதாக, சென்னையில் 382வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் மிதிவண்டிகள் கண்காட்சியை திறந்து வைத்த சுற்றுலாத்துறை செயலர் சந்திர மோகன், பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுற்றுலா வழிகாட்டியும் உடன் வருவார் என்று கூறியிருந்தார்.

வீராணம், காட்டுமன்னார்கோயில், கடம்பூர் கோயில்கள், திருப்புறம்பியம், ராஜராஜன், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைகள், கல்வெட்டு, பழையாறை, உடையாளூர், ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் விவரம் கூறும் கல்வெட்டு, ராஜராஜன் மெய்கீர்த்தி கல்வெட்டு, கோடியக்கரை ஆகியவை பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கிய இடங்களாகும்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *