நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ. தேர்வுகள் மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ. தேர்வுகள் மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் ஐ.டி.ஐ. தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிவர் புயல்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நவம்பர் 23-ந் தேதி முதல் அகில இந்தியத் தொழிற்தேர்வு நடைபெற்று வருகிறது. நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு 7 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் நவம்பர் 24-ந் தேதி முதல் நிறுத்தம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

ஐ.டி.ஐ. தேர்வு மாற்றம்
இதன் காரணமாக மத்திய அரசு ஒப்புதலுடன் நவ.25 முதல் நவ.27 வரை நடைபெறவிருந்த அகில இந்திய தொழிற்தேர்வு (ஐ.டி.ஐ.) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *