பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 25ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 25ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைகழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைகழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் கடந்த மாதம் 25ம் தேதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா சூழல் காரணமாக மாணவர்களை நேரில் அழைக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக திறம் பெற்ற பேராசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர், முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்புடன் சான்றிதழ்கள் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படுகிறது.

தரவரிசைப் பட்டியல்:

பெரும்பாலானா மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால், மாணவர்களின் நலன்கருதி 17.9.2020 வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களின் கணக்கில் லாகின் செய்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படடு விட்டதா என உறுதி செய்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 044-22351014 மற்றும் 044-22351015 என்ற தொலைபேசி எண்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *