மீனாட்சி அம்மன் கோவிலில் தொடர் பக்தர் கூட்டம்..நெரிசலை தவிர்க்க ஆன்லைன் பதிவு வசதி

மீனாட்சி அம்மன் கோவிலில் தொடர் பக்தர் கூட்டம்..நெரிசலை தவிர்க்க ஆன்லைன் பதிவு வசதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர் கூட்டம் நிரம்பிவருவதால் நெரிசலை தவிர்க்க ஆன்லைன் பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

கொரோனா ஊரடங்கால் ஐந்து மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 3ம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல கட்டுப்பாட்டுகளுடன் திறக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மக்கள் கூட்டம் நிரம்பிவருவதால் நெரிசலை தவிர்க்க ஆன்லைன் பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.அம்மன் சன்னதி அஷ்டசக்தி மண்டபம் வழியாக, பக்தர்கள் கோவிலுக்கு சென்று, தரிசனம் முடித்து விட்டு மீண்டும் அதே வழியாக வெளியேறி வருகின்றனர்.பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி வருவதால் இன்று முதல் கட்டண தரிசனம் பெறுவோர் ‘தெற்கு கோபுரம் வழியாக சென்று அம்மன்,சுந்தரேஸ்வரரை வழிபட்டு , அஷ்டசக்தி மண்டபம் வழியாக வெளியேற வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் பக்தர்களுக்கு சார்பாக மீண்டும் இலவச லட்டு வழங்கப்படுகிறது.கட்டண தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் இந்த ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணைகமிஷனர் செல்லத்துரை செய்துள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *