கமல்ஹாசனிடம் இருந்து காப்பி அடிக்கிறார் ஸ்டாலின் : அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

கமல்ஹாசனிடம் இருந்து காப்பி அடிக்கிறார் ஸ்டாலின் : அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

கமல்ஹாசனிடம் இருந்து காப்பி அடித்து கிராமசபை கூட்டங்களை ஸ்டாலின் நடத்துகிறார் என்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு :

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த செங்காட்டூர் பகுதியில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறுவது முற்றிலும் தவறானது.

தமிழகத்தை விட கேரளாவில் தான் பெண்களுக்கு வன்கொடுமை 3 மடங்கு அதிகமாக நடைபெறுகிறது இதை முதலில் கமல்ஹாசன் புரிந்துகொள்ளவேண்டும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுவது நியாயமற்றது என்று தெரிவித்தார்.

Read more – இங்கிலாந்திற்கான விமான போக்குவரத்து தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

மேலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காப்பி அடிக்க மட்டுமே தெரியும், கமல்ஹாசன் தான் முதலில் கிராம சபை கூட்டத்தினை நடத்தினார்.அவரை பார்த்து ஸ்டாலின் காப்பி அடித்து விட்டார்.ஸ்டாலினுக்கு மத்திய அரசும் தெரியாது, மாநில அரசும் தெரியாது, பஞ்சாயத்து பற்றியும் தெரியாது,கிராமசபை கூட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் தான் நடத்த வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறார் என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *