கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய உத்தரவு

கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள  கூட்டுறவு  சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று காலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில்  கூட்டுறவு சங்கங்களில்  தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல்,  வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில்  பணியாற்றும்  இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிட்டுள்ளார்  இந்த தீர்ப்பை  8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *