Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

30 நாட்கள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்: விரைவில் விடுதலை வேண்டும் கண்ணீர் மல்க அற்புதம்மாள் கோரிக்கை

October 9, 2020
பேரறிவாளனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜோலார்பேட்டை:

முன்னாள் பிரதமர் ராஜீவகாந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன். சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழகத்தில் அதிகரித்த டெங்கு பாதிப்பு… சுகாதார குழுவினரை ஆய்விற்கு அனுப்பிய மத்திய அரசு!!

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தலைமை செயலகத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் பலி- ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு

கண்ணீர்மல்க வரவேற்பு :

அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன், ஜோலார்பேட்டை, இடையம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார். பரோல் காலத்தில்பேரறிவாளன் வெளியே செல்லவும், அறிமுகம் இல்லாத ஆட்களை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் காவல் துறை அனுமதியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

என் மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு 90 நாட்கள் பரோல் கேட்டேன். ஆனால், 30 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என் கணவர் குயில்தாசன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அவர் கிருஷ்ணகிரியில் உள்ள என் மகள் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவரை சந்திக்க பேரறிவாளனுக்கு அனுமதி கிடைக்குமா? என தெரியவில்லை. ஆனால், அதற்காக முயற்சி செய்வேன்.
தமிழக அமைச்சரவையும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் தமிழக ஆளுநர் அதற்கான உத்தரவை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

விடுதலை வேண்டும்:

இதுவரை யாரும் அனுபவிக்காத தண்டனையை என் மகன் அனுபவித்துவிட்டார். இளமை காலம் முழுவதும் சிறையிலேயே கழிந்துவிட்டது. தற்போது பல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்படுகிறார். அவரது உடல் நிலையை சரி செய்து கொள்ள பரோல் வழங்கப்பட்டுள்ளது. இது போதாது, பேரறிவாளனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும் என்பதே என் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தொல்லியல் துறையில் தமிழ் புறக்கணிப்பு விவகாரம்: மத்திய அரசை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்

Next Post

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி துறையில் வேலை.. ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்

Next Post

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி துறையில் வேலை.. ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version