Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சூடு பிடிக்கிறது பொள்ளாச்சி பாலியல் வழக்கு

January 11, 2021

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைதானவரை 2 நாள் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

 இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் மிரட்டி பணம் பறித்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சரணடைந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரிலேயே 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஆடைக்கு மேல் தொட்டாலும் பாலியல் குற்றமே!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திடீரென சாலையோரத்தில் நின்ற வாகனம்… போலீசார் பாதுகாப்பளிப்பது யாருக்கு?

30 வயது பெண் போலீஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் 2 பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்டையில் அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹெரன்பால், பாபு உள்ளிட்ட 3 பேரை கடந்த 5-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்று கருதிய சிபிஐ அதிகாரிகள் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோவை பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதன்படி ஹெரன்பால் என்பவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. 5 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் அருளானந்தம், பாபு ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைத்த நிலையில் ஹெரன்பாலை மட்டும் கூடுதலாக விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று கூறி சிபிஐ அதிகாரிகள் அனுமதி வாங்கி இருக்கின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு 5 பேர் சிக்கிய நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

அதன்பிறகு தற்போது 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றனர். அதில் அருளானந்தம் என்பவர் அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இதில் பல அரசியல் முக்கிய புள்ளிகள் சிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஹரியானாவிலும் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக்காய்ச்சல் : 4 லட்சம் பறவைகள் உயிரிழப்பு

Next Post

இந்தியாவில் பெண் விமானிகள் புது சாதனை : முற்றிலும் பெண்கள் மட்டுமே இயக்கிய நீண்ட தூர விமானம் பெங்களூரில் வெற்றிகரமாக தரையிறங்கியது

Next Post

இந்தியாவில் பெண் விமானிகள் புது சாதனை : முற்றிலும் பெண்கள் மட்டுமே இயக்கிய நீண்ட தூர விமானம் பெங்களூரில் வெற்றிகரமாக தரையிறங்கியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version