அரசியல்வாதிகள் ஆதாயத்திற்காக சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர்-உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

அரசியல்வாதிகள் ஆதாயத்திற்காக சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர்-உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

அரசியல்வாதிகள் ஆதாயத்திற்காக சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அனுமதியில்லாமல் சிலைகள்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு அரசியல்வாதிக்ள் போட்டி போட்டு மரியாதை செலுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் இந்த சிலைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே அனுமதி பெற்ற சிலைகளின் அருகே இருக்கும் ஏணிகளை அகற்றவும், அனுமதிபெறாத சிலைகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசியல்வாதிகள் ஆதாயம்
அப்போது பேசிய நீதிபதிகள், சிலைகள் மரியாதைக்காக வைக்கப்படுகின்றன. தற்போது சிலைகளை கூண்டுக்குள் வைக்கின்றனர். இதை பார்க்கும் போது சிலைக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது போல் தெரிகிறது. சிலைகளை அவமதிப்பதாகவும் உள்ளது.

பல அரசியல்வாதிகள் ஆதாயத்துக்காக சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர். அப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றனர். பின்னர், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு வரும் 14-ந் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *