சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அவருக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை முதன்மைச் செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்ட அரசாணையின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாம்பரம் ஆணையர் பொறுப்பு அமல்ராஜுக்கு
பிரேம் ஆனந்த் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் பொறுப்பில் இருந்த இயக்குநர் பதவி
முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த அருண், கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநராக மாற்றப்பட்டார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஐஜி சி.மகேஸ்வரிக்கு இயக்குநர் பதவியின் முழுக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பதவிக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.





