சாத்தான்குளம் வியாபாரிகளை அடித்துக் கொன்ற சிறப்பு எஸ்.ஐ.. கொரோனாவால் உயிரிழப்பு

சாத்தான்குளம் வியாபாரிகளை அடித்துக் கொன்ற சிறப்பு எஸ்.ஐ.. கொரோனாவால் உயிரிழப்பு
சாத்தான்குளம் வியாபாரிகள் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் எனும் இருவர் போலிஸ் விசாரணையின்போது உயிரிழந்தது தொடர்பான சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான துணை ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர் உளட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், போலீசாரிடம் மாறி மாறி விசாரணை நடத்தி வந்தனர். அதற்குள் கைதான போலீசார், விசாரணைக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் என மாறி மாறி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 வயதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *