தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம்!!!

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம்!!!

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாk தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கக் கூடும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு ஆந்திர பகுதிகளில்
சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *