சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டி.. திருவண்ணாமலை மாணவிக்கு சர்வதேச கவுரவம்

சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டி.. திருவண்ணாமலை மாணவிக்கு சர்வதேச  கவுரவம்

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, தமிழகத்தை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளாா்.

திருவண்ணாமலையை சேர்ந்த வினிஷா உமாசங்கர் எனும் 9ம் வகுப்பு மாணவி கண்டுபிடித்துள்ள, சூரிய சக்தியால் இயங்கக்கூடிய இஸ்திரி பெட்டி, தற்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக இவா், தானாகவே இயங்கும் வகையில் அறிதிறன் மின்விசிறியைக் கண்டறிந்திருந்தாா்

மாணவி வடிவமைத்துள்ள இஸ்திரி பெட்டி உள்ள வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்.
அவை, 100 ஏ.எச். திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மின் கலனை முழுமையாக மின்னேற்றம் செய்ய 5 மணி நேரம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. இதன் மூலம் 6 மணிநேரம் வரை தொடா்ச்சியாக இஸ்திரி செய்ய முடியும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வினிஷா கூறியதாவது: எனக்கு 5 வயது இருக்கும்போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் அதிகரித்தது. சோலார் இஸ்திரி பெட்டியை கண்டறிய எனக்கு 2 மாத காலமானது. இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளா்கள் வடிவமைத்து, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனா். இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைத்து விடும் என கூறினார். மேலும், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடாமல் இயங்கும் வகையிலான உபகரணங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.

இதனிடையே, மாணவியின் கண்டிபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இள வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனின் துணைப் பிரதமா் இசபெல்லா லோவின் கலந்து கொள்ளும் இன்றைய இணையவழி நிகழ்வில், இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய மதிப்பில், சுமாா் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுத் தொகையை தனது வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக வினிஷா உமாசங்கா் தெரிவித்துள்ளார்.

வினிஷா கடந்த ஆண்டு, டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் இக்னைட் விருது பெற்றாா். அதே ஆண்டு, சிறந்த பெண் கண்டுபிடிப்பாளா் பிரிவில் டாக்டா் பிரதீப் பி தேவனூா் கண்டுபிடிப்பாளா் விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
தற்போது , 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவா்களின் பிரிவில் பிரதமரின் ராஷ்டிரீய பால் சக்தி புரஸ்காா் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *