அரசு செயலாளர்களுக்கு இறையன்பு எழுதிய இனிப்பான கடிதம்!

அரசு செயலாளர்களுக்கு இறையன்பு எழுதிய இனிப்பான கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்யவேண்டும் என அனைத்துத்துறையின் அரசு செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Irai anbu

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவினின் நிறுவனம்) தினம் சராசரியாக 41 இலட்சம் விட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் விற்பனை போக, 27 இலட்சம் லிட்டர் பாக்கெட் பாலாகவும். மீதமுள்ள ஆவின் பால் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன். ரசகுல்லா. மோர், லஸ்ஸி, சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உயர்ந்த தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

மேலும் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து வருகின்றது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.10.2021 அன்று புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஜுகத்லி கால் கிலோ 225 ரூபாய்க்கும், நட்டி மில்க் கேக் கால் கிலோ 210 ரூபாய்க்கும், மோத்தி பாக் கால் கிலோ 170 ரூபாய், காஜு பிஸ்தா ரோல் கால் கிலோ 275 ரூபாய், காபி பிளேவர்டு மில்க் பர்பி கால் கிலோ, 210 ரூபாய் என மொத்தம் ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு, அரை கிலோ, 425 ரூபாய் என விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், சுகாதாரமான முறையில், ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யில் தயாரிக்கப்பட்டவையோடு, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய துறை சார்ந்த, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்கவும், துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்குவதாக இருந்தால் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *