நெல்லை, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் எல்லாம் திருநெல்வேலியில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சி இருக்கும் இந்த நிலையில் இதுவரையில் லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றிற்க்கு முன்னேறி இருக்கின்றது.இதுபோக 6 போட்டிகளில் ஆடியுள்ள பால்சி திருச்சி அணி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் உள்ளன. இந்த நிலையில் இன்றைய லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் களம் காண உள்ளது. அதே வேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியாது எனவே கட்டாய வெற்றி நெருக்கடியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களம் இறங்குகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸை வென்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
You can share this post!
author
Related Articles
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு:…
- October 31, 2026 8:58 AM GMT+5:30
ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வு: நாளை…
- October 27, 2026 11:45 AM GMT+5:30
டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
- October 20, 2026 8:56 AM GMT+5:30

