திருச்சியை மையமாகக் கொண்டு, தொல்லியல் மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி

திருச்சியை மையமாகக் கொண்டு, தொல்லியல் மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி
தமிழகத்தில் புதியதாக திருச்சியை மையமாகக் கொண்டு, தொல்லியல் மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தென்னிந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர், தார்வார்ட், ஹம்பி என்று மூன்று தொல்லியல் மண்டலங்களும், தெலங்கானாவில் ஹைதராபாத்திலும், ஆந்திராவில் அமராவதியிலும் தனித்தனி தொல்லியல் மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 411 தொல்லியல் மற்றும் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க சென்னையை மையமாகக் கொண்ட ஒரேயொரு தொல்லியல் மண்டலம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. சென்னை தொல்லியல் மண்டலத்தைப் பிரித்து தென் தமிழகத்தில் வேறொரு தொல்லியல் மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாகவே தமிழகத்தில் இருந்து எழுந்து வந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் மத்தியப் பிரதேசத்தில் ஜபால்பூர், உத்திரப் பிரதேசத்தில் ஜான்சி மற்றும் மீரட், மேற்கு வங்கத்தில் ரைகாஞ்ச் மற்றும் தமிழகத்தில் திருச்சியை மையமாக கொண்டது என புதியதாக ஆறு தொல்லியல் மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு தொல்லியல் மண்டலங்களால் நம் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களைச் சிறப்பான முறையில் பாதுகாக்க முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை தொல்லியல் மண்டலத்தை இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாகக்கொண்ட மற்றொரு தொல்லியல் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையால் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்தில் பராமரிக்கப்படாத தொல்லியல் சின்னங்களும், பாரம்பரிய சின்னங்களும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *