இன்றைய ராசிபலன் 13.03.2021!!!

இன்றைய ராசிபலன் 13.03.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை தேதி 13.03.2021, நல்ல நேரம் :காலை 7.00-8.00, மாலை 5.00- 6.00, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

நீங்கள் எடுக்கும் காரியத்தை துணிவுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பிறரிடம் கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்துடன் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம் :

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமையும்.

மிதுனம் :

நீங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும்.

கடகம் :

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை கையாள வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

சிம்மம் :

உங்களின் ராசிக்க நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

கன்னி :

உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் :

குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

தனுசு :

உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் அதிகமானதால் பணப்புழக்கம் அதிகமாகும்.

மகரம் :

குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் ஆதரவால் கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

கும்பம் :

வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உறவினர்கள் வருகை மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

மீனம் :

உறவினர்கள் பக்கபலமாக இருந்ததால் கடன் பிரச்சினை தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *