நீண்ட நாட்களாக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் 5ஜி இந்த வருடமாவது இந்தியாவுக்கு வருமா?
அமெரிக்கா, தென்கொரியா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் 5ஜி பல இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவிற்கு எப்போது 5ஜி வரும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. 5ஜி ஸ்பெக்ட்ரமிற்கான ஏலத்தை இன்னும் அரசு அறிவிக்காத நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியாவிற்கு 5ஜி வருவது சாத்தியமில்லாதது என நம்பப்படுகிறது.
எனவே, உள்நாட்டு தொலைத்தொடர்பு சந்தைக்கு 5ஜி இன்னும் அறிமுகமாக சிறிது காலம் ஆகும் என ஏர்டெல் மற்றும் ஜியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
READ MORE- பப்ஜி மொபைல் இந்தியாவுக்கும் நிரந்தர தடை?
4ஜி-யுடன் ஒப்பிடும் போது 5ஜி-யின் வேகம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் இவற்றை கருத்தில் கொண்டு விரைவில் இந்தியாவிற்கு 5ஜி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் பயனாளர்கள் பலரின் எதிர்ப்பார்ப்பும்.