புதிய வகை கொரோனா ?… மக்கள் வெளியே நடமாட தடை!

புதிய வகை கொரோனா ?… மக்கள் வெளியே நடமாட தடை!

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மகாணத்தில் இருந்து இரண்டாவது அனைத்து உலகநாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதியில், கரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. மூன்றாவது அலை குறித்த பீதி மக்களிடையே பரவி வரும் நிலையில், சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரைஸைக் கட்டுப்படுத்தும் விதமாக, மக்களிடம் அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. சீனாவில் லான்சோ நகரில் தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

லான்சோ நகருக்கு மற்ற நகரங்களில் இருந்து 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *