9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா…

9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா…
சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலமாக 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது.

சீனா தன அடித்த வேலையை ஆர்மபித்து விட்டது. நேற்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ராக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அது தற்போது விவாதத்தை கிளப்பி வருகிறது. இந்த ராக்கெட்டில் மோத்தம் ஒன்பது செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இதன் பயன்பாடுகள் யாதென்று விமர்சித்து வருகின்றனர்.

லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைக்கோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது சீனா.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *