பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது : கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது : கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதால் முன்னணி கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

பால்மஸ் :

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பால்மஸ் கிளப் கால்பந்து அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் சிறிய ரக விமானத்தை இயக்கிய விமானியும் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Read more – மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று வெளியீடு : அறிமுகம் செய்கிறார் குடியரசு தலைவர்

பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே செல்லும் போது விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் எந்த வகையை சார்ந்தது என்றும் கால்பந்து வீரர்கள் பற்றிய விவரத்தை கால்பந்து அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை .

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *