இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின்

இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின்

இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பெற்று வாழவேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புதின் 2036 வரை ரஷ்ய அதிபர் பதவியில் நீடிக்க வாய்ப்பு மற்றும்  பிற செய்திகள் - BBC News தமிழ்

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சுதந்திரமான வளர்ச்சியின் பல ஆண்டுகளில், உங்கள் நாடு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை பொருளாதார, சமூக, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் அடைந்துள்ளது. உலக அரங்கில் இந்தியா தனக்கென தனி மதிப்பை பெற்றிருக்கிறது. சர்வதேச பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கிறது. இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலக அளவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும் கூட்டு முயற்சிகளின் மூலம் வளர்ச்சியை உறுதி செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற்று வாழ வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *