‘மகசேசே விருது’ புறக்கணித்தார்… கே.கே.ஷைலஜா

 ‘மகசேசே விருது’ புறக்கணித்தார்… கே.கே.ஷைலஜா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் தலைவருமான கே.கே.ஷைலஜாவிற்கு வழங்கப்பட்ட ரமோன் மகசேசே விருதை அவர் புறக்கணித்துள்ளார்.

Former Kerala health minister Shailaja rejects Magsaysay Award - Rediff.com  India News

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மகசேசேவின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து அரசுப்பணி, பொதுசேவை, பத்திரிகை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சேவை செய்யும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவில், மறைந்த திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, கார்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த நிலையில் கேரளாவின் முன்னாள் அமைச்சர் கே.கே.ஷைலஜா  இந்த விருதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கேரள சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியது தனிப்பட்ட சாதனை அல்ல. அது ஒரு கூட்டு முயற்சி.மேலும், பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர். அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை பெற விருப்பமில்லை என்றார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *