ரஷ்யா இனிமேல் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்காது- இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது ரஷ்யா

ரஷ்யா இனிமேல் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்காது- இந்தியாவின்  கோரிக்கையை ஏற்றது ரஷ்யா
இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற ரஷ்யா இனிமேல் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்காது என்று உறுதி அளித்தது.

மாஸ்கோ:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் மாஸ்கோவில் நடைபெற்றது .இதில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர்ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்று உள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாலை மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி ஜெனரல் செர்ஜி ஷோயுகுவை சந்தித்து பேசினார்.ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது .

இந்தியாவின் சார்பில் ரஷ்யா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை என்ற கொள்கையை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.

இரு அமைச்சர்களும் நட்பு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த அளவிலான ஒத்துழைப்பை உள்ளடக்கியது என வெளியுறவுத்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டி உள்ளது.

“இன்று மாஸ்கோவில் ரஷ்யா பாதுகாப்பு மந்திரி ஜெனரல் செர்ஜி ஷோயுகுடனான சந்திப்பு சிறந்த சந்திப்பாக இருந்தது. மேலும் இரு நாடுகளுக்கிடையில் உள்ள பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பது பற்றியும் பலவிதமான பிரச்சினைகள் குறித்து பேசினோம்” என்று ராஜ்நாத் சிங் தனது சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *