கொரோனாவில் இருந்து மீண்டார் டிரம்ப்: வெள்ளை மாளிகை தகவல்

கொரோனாவில் இருந்து மீண்டார் டிரம்ப்: வெள்ளை மாளிகை தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

4 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுபற்றி அதிபர் டிரம்பின் ஊடகச் செயலாளர் கெய்லேய் மைக்எனானியிடம், வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லே கூறும்பொழுது, அதிபர் டிரம்புக்கு சமீபத்தில் நடந்த அடுத்தடுத்த கொரோனா பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என்ற தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்ந்து நடந்த ஆன்டிஜென் பரிசோதனைகளின் நெகடிவ் முடிவுகள், வைரசின் தாக்கம், ஆர்.என்.ஏ. மற்றும் பி.சி.ஆர். அளவீடுகள் உள்ளிட்ட கூடுதல் மருத்துவ மற்றும் ஆய்வக தரவுகள் ஆகியவற்றுடன் வைரசின் மீது நடந்து வரும் ஆய்வு ஆகியவற்றின்படி, டிரம்ப் வைரசின் இருந்து விடுபட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று, வைரசின் தொற்றை நீக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டு ஒழுங்குமுறைகளின்படி, வைரசை பிறருக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *